காங்கேசன்துறை பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய 22 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக, குடும்பம் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று (ஓகஸ்ட் 30) ஜே/235 கிராம சேவையாளர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை கிளையின் நிர்வாகசபை உறுப்பினர் சா.தவசங்கரி,கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சி.தனுஷியா ஆகியோர் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.