‘நீர்பாசன செழுமை’ எனும் திட்டத்துக்கு அமைய உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் கல்மடு குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளை அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.
இந்தத் திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது என்று நீர்பாபாசன திணைக்கள அதிகாரிகள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
சுமார் 500 மில்லியன் ரூபா நிதியை இந்தத் திட்டத்துக்காக உலக வங்கி ஒதுக்கியுள்ள நிலையில் மேலும் 300 மில்லின் ரூபா தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டு கோரிக்கை விடப்பட்டது.
அதேவேளை இந்தத் திட்டத்தை எதிர்வரும் பருவமழை காலத்துக்கு முன்னர் முடித்து வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.