வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்ட போது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட சுமார் 12 கிலோ குஷ் போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடையில் அமைந்துள்ள காகோ நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பப்பட்ட 2 மரப்பெட்டிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிராம் குஷ் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த மரப்பெட்டிகளில் 24 பொதிகளில் குஷ் போதைப்பொருள் இருந்ததாகவும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிக்க பொருட்களின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்துடன் ஒருவரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும், இந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 84 மில்லியன் ரூபா எனவும் சுங்கம் தெரிவித்துள்ளது.