வைத்தியருக்கு உயிர் அச்சுறுத்தல்!- மருத்துவ சேவைகள் இடைநிறுத்தம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்புப் பிரிவின் வைத்தியருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையால் மருத்துவ சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குழு ஒன்றினால் வைத்தியரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் அவரது அலுவலகத்துக்கும் சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி புத்தூர் சந்தியில் அமைக்கப்பட்ட தாக சாந்தி நிலையத்தில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு பெரிய சத்தமாக பாடல்கள் இசைக்கப்பட்டன.

அதனால் தமது சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக வைத்தியர் குறித்த தாக சாந்தி நிலைய ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

வைத்தியரின் கருத்தை பொருட்படுத்தாத அவர்கள் தொடர்ச்சியாக பெரிய சத்தமாக பாடல்களை இசைக்கவிட்டுள்ளனர்.

இதன்பின்னர் குழு ஒன்று வைத்தியரின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதுடன், அவரது அலுவலகத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share this Article