கண்காட்சி நிகழ்வுகள் சிறப்புடன் ஆரம்பமாகியது “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன்று (ஆகஸ்ட் 04) சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ளது “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில்  அரங்க நிகழ்வுகளை அடுத்து நெடுந்தீவின் ஏனைய பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடங்கள் விருந்தினர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச சபையின் பொது நூலகத்தில் அமைக்கப்பட்ட  நெடுந்தீவு எழுத்தாளர்களின் நூல்களால் அலங்கரிக்கப்பட்ட இலக்கியக் கண்காட்சி கூடம் , நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை பாலர்பாடசாலை வளாகத்தில் போட்டி அடிப்படையில் பெற்ற மாணவர்களின் ஓவியங்கள் அடங்கிய ஓவியக் கண்காட்சிக் கூடம் என்பவற்றினை விருந்தினர்கள் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரைக்கும் இவ் வளாகத்திலேயே  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article