நெடுந்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய கெண்டு இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடந்த 15ஆம் திகதி நெடுந்தீவுக் கரையோரங்களில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதலில் 729 கிலோகிராமுக்கும் அதிக கெண்டு இலைகள் மீட்கப்பட்டன.
நெடுந்தீவு பெரியதுறை, சாமிதொட்டமுனை மற்றும் வெல்லை கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இலைகள் மீட்கப்பட்டது.
இந்தப் பகுதியில் கடற்படையினர் வழமையாக பிரசன்னமாகியிருந்தமையால், அவற்றை தரையிறக்க முடியாத கடத்தல்காரர்கள் கெண்டு இலைகளை கடலில் மிதக்க விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கெண்டு இலைகளின் இருப்பு, சட்ட நடவடிக்கைகளுக்காக பாரப்படுத்தப்படும்வரை கடற்படையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.