காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கசூரினா கடற்கரையினை சுத்தப்படுத்தும் சிரமதானப்பணி இன்று (செப்ரெம்பர் 19) காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது.
உலக சுத்தப்படுத்தல் தினத்தின் இவ் வருட தொனிப்பொருளாக “ஆற்றங்கரையில் ஒழுங்கற்ற கழிவுகளை சுத்தம் செய்தல்” என்ற Zero plastic அமைப்பின் தேசிய செயன்முறைக்கமைய இந்த சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்த சிரமதானப் பணியில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், காரைநகர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், ஆசியர்கள், பிரதேச கிராம அலுவலர், சுற்றுச்சூழல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் சிரமதானப்பணியில் பிளாஸ்டிக், போத்தல், பொலித்தீன் முதலான திண்மக்கழிவுகள் அகற்றப்பட்டன.