எழுவைதீவில் மின்சார சபையால் விநியோகிக்கப்படும் மின்சாரம் கூடி குறைந்து வருவதால் மின்சாதனங்கள் செயலிழந்து பெரும் நஷ்டம் ஏற்படுவதாக பாவனையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக காலை 6.00 தொடக்கம் 7.00மணி, மாலை 6.20 தொடக்கம் 7.00மணி ஆகிய நேரங்களில் அதிகளவில் சீரற்ற மின்சாரம் வழங்கப்படுகின்றது.
இதன் காரணமாக கணணிகள் மற்றும் மின்சாதனங்கள் பதிப்படைந்துள்ளது என மக்கள் தெரிவிப்பதுடன், நேற்று(ஜூன் 7) இரவு அடிக்கடி மின்சாரம் கூடிக்குறைந்ததால் அதிகளவான மின்கட்டணத்தையும் செலுத்தி ஒழுங்கற்ற மின்சாரம் பெறுவதாக எழுவைதீவு மக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்துகளை பகிர்கின்றனர்.
இது தொடர்பாக வேலனை மின்சார சபை தலைமை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்த போதும் கடந்த இரண்டு நாட்களாக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்
புதுப்பிக்கத்தகு மின்வழங்கல் எனும் தொனிப்பொருளில் இலங்கையிலேயே முதன்முதலாக, எழுவைதீவில் காற்றலை மின்கலம், சூரியகலம் ஆகியவற்றின் கூட்டிணைந்த மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டபோதும்
எந்தவொரு காற்றாலையும் இயங்காத நிலையும் ஒன்று முற்றாக கழற்றப்பட்ட நிலையிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.