அனலைதீவு மற்றும் கோவளம் கடற்பரப்பில் நேற்று (மார்ச் 23) எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்களுடன் இரண்டு இந்திய இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டன.
12 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டதுடன், அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.