“என்னை வாழவைத்த தெய்வமே உமக்கு நன்றி”நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் நெகிழ்சியான சம்பவம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடந்த 31 வருடங்கள் அலுவலக உதவியாளராக பணியாற்றி இன்றுடன் பணி ஓய்வு பெற்ற திரு. பீற்றர் டிவைன் ஜோண்சன் கெனடி அவர்களுக்கு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சேவைநலன் பாராட்டுவிழா இடம்பெற்றதைத் தொடர்ந்து உத்தியோகத்தரை அவரது வீடுவரை பிரதேச செயலர் (பதில்) மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து அழைத்துச் சென்றுவிட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இன்றைய தினம் (மே 03) இடம்பெற்றுள்ளது.

இதேவேளை பணிநிறைவு பெற்று வீடுசெல்லும்போது தான் பணியாற்றிய அலுவலகத்தின் நுழைவாயில் முன்னால் முழந்தாழிட்டு “என்னை வாழவைத்த தெய்வமே உமக்கு நன்றி” என கண்ணீர்மல்க விடைபெற்ற நிகழ்வு அனைவரையும் ஒருமுறை கலங்கவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article