ஊர்காவற்துறை சித்த மத்திய மருந்தகத்திற்கான புதிய கட்டிட நிர்மாணத்திற்கான ஆரம்பகட்ட கள ஆய்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்துறை சித்த மத்திய மருந்தகத்தின் சுதேச மருத்துவ சேவைகளை மேலும் வினைத்திறனுடனும், சிறப்பாகவும் முன்னெடுக்கும் நோக்கில், எதிர்வரும் PSDG – 2027 நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஊர்காவற்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள அரச காணியில் புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் ஊர்காவற்துறைப் பிரதேச மக்களுக்கும், அதனை அண்மித்த தீவகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தரமான சுதேச மருத்துவ சேவைகளை இலகுவாகவும் சிறப்பாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, கடந்த வெள்ளிக்கிழமை (13.11) புதிய கட்டிடம் அமையவுள்ள அரச காணியின் அமைவிடம் மற்றும் கட்டிட நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் தொடர்பில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக் கள ஆய்வில் சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண ஆணையாளர் – சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் ஊர்காவற்துறை சித்த மத்திய மருந்தகத்தின் மருத்துவப் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு காணியைப் பார்வையிட்டதுடன், நிர்மாணப் பணிகள் தொடர்பான ஆரம்பகட்ட விடயங்களையும் ஆராய்ந்தனர்.

அத்துடன், தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஊர்காவற்துறை சித்த மத்திய மருந்தகத்திற்கும் விஜயம் மேற்கொண்டு, அங்கு முன்னெடுக்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் தற்போதைய வசதிகள் தொடர்பிலும் பார்வையிடப்பட்டது.

ஊர்காவற்துறை மக்களுக்கும் தீவகப் பகுதி மக்களுக்கும் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சிறந்த சுதேச மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான இம்முயற்சி, பிரதேசத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.

Share this Article
Leave a comment