ஊர்காவற்துறையில் சோகச் சம்பவம்: கிணற்றில் விழுந்த யுவதி பலி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா வயது 19 என்ற இளம் பெண் நேற்று (மே 03) கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியான இவர், இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதையடுத்து மீட்கப்பட்ட அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Share this Article
Leave a comment