முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி தொடர்ந்த வழக்கானது கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் நிலையில் இன்றையதினம் (மே 5) முல்லைத்தீவு நீதவான் நீதி மன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றது.
இதன் போது வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 21.09.2023 க்கு தவணையிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸாரால் 20.04.2019 கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதற்கமைய இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமனற நீதிபதி ரி சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி. எஸ். எஸ். தஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது வழக்கு தொடுனரான முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு அதிகாரி வருகைதராத நிலையில் வழக்கு தொடுனரான கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 21.09.2023 க்கு தவணையிடப்பட்டுள்ளது.