இலங்கை சிறு படகு வலித்தல் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது சிறு படகு வலித்தல்போட்டித் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்று (செப். 16) முப்படையினரின் ஏற்பாட்டில் கடற்படையினரின் ஒழுங்குபடுத்தலில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வுகள் அனைத்தும் மண்டைதீவில் அமைந்துள்ள இயற்கை எழில் மிகுந்த படகு வலித்தல் திடலில் இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழமை(செப். 14) தொடக்கம் இடம்பெற்ற போட்டித் தொடரின் இறுதி நிகழ்வே இடம்பெற்றது.
இதன்போது முப்படையினரின் வீரர்கள் , பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கிடையில் குழு மற்றும் தனி படகு வலித்தல் போட்டிகள் இடம்பெற்றது.
முப்படையினருக்கான போட்டிகளில் இராணுவ அணியும் , பாடசாலை மாணவர்களுக்கான குழு போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலயமும் சம்பியன் பட்டத்தினை வெற்றிகொண்டன.
நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வேலணை பிரதேச செயலாளர் மற்றும் முப்படைகளின் வடமாகாண அதிகாரிகள் போன்றோர் விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தனர்.