இரு நாள்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம். தினசரி நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுப்பதன் மூலம் போதுமான ஓய்வ பெறுவது அவசியம். யாராவது பணியில் இருந்தால் அல்லது பாடசாலைக்குச் செல்வபவர்கள் என்றால் அவர்கள் சில நாள்கள் வீட்டில் இருக்க வேண்டும்.
இரண்டாவது மிக முக்கியமான விடயம் திரவ உட்கொள்ளலை அதிகரிப்பது. காய்ச்சலைக் கட்டப்படுத்தப் பரசிட்டமோல் உட்கொள்ளலாம். ஆயினும் டிஸ்பிரின், அஸ்பிரின் போன்ற மருந்துக்களைத் தவிர்க்க வேண்டும்.
டெங்குத் தொற்றாளர்கள் இந்த மருந்துகளை உட்கொண்டால் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இரண்டாவது நாளில் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றால், அவர்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.