இரண்டாம்நாள் கண்காட்சி நிகழ்வுகள் சிறப்புடன் ஆரம்பமாகியது “நெடுவூர்த்திருவிழா” – 2024

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவை நிலைபேறாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் நேற்றையதினம் (ஆகஸ்ட் 04) சிறப்பான முறையில் ஆரம்பமாகியுள்ள “நெடுவூர்த்திருவிழா” 2024 இன் நிகழ்வுகளில்  இரண்டாம் நாள் நிகழ்வாக நெடுந்தீவு கலாச்சார மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்ட விவசாய கண்காட்சிக் கூடம் மற்றும் பிரதேச சபை நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைக் கண்காட்சிக் கூடம் என்பன  வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இரண்டாம் நாளாகிய இன்று (ஆகஸ்ட்05) காலை வருகைதந்த கனடிய அபிவிருத்தி இணைப்பாளர் மற்றும் தமிழ்க்கொடி நிறுவன பணிப்பாளர் மற்றும் குழுவினர் இன்றைய நிகழ்வுகளை சிறப்பித்தனர்

.

அத்துடன் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ்க்கொடி நிறுவன பணிப்பாளர் சிறப்புரையினை ஆற்றியிருந்தார்.

Share this Article