இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரிய இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு மத்தியஅரசு சலுகைகள்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

​இந்திய அரசாங்கம், 2015 ஜனவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்குவந்து, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, பயண ஆவணங்கள் அல்லது வீசா இல்லாதஇலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடிவரவு சட்டங்களின் கீழ் இருந்து விலக்குஅளித்துள்ளது.

​இதேபோன்று, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியநாடுகளிலிருந்து 2024 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்தஇந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின் மதத்தவர்கள், பார்சிகள் மற்றும்கிறிஸ்தவர்கள் ஆகிய ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆவணமற்றஅகதிகளுக்கும் இந்த விலக்கு பொருந்தும்.

​இதுகுறித்து மத்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளஅறிக்கையின்படி, இந்த உத்தரவின் கீழ் உள்ளவர்களுக்கு நாடுகடத்தப்படுவதிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.

​இந்தியாவில் நீண்ட காலமாக அகதியாக வசிப்பவர்களுக்கு இது ஒரு பெரியமனிதாபிமான நிவாரணமாகக் கருதப்படுகிறது.

Share this Article