நெடுந்தீவினை சேர்ந்த, கனடாவில் வசிக்கும் ஆறுமுகம் குகனின் “நெய்தல்” சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று (செப். 21) சிறப்பாக நடைபெற்றது.
சட்டத்தரணி டானியல் ஜீவாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நூல் பற்றிய மதிப்புரையை காங்கேசு சாந்தலிங்கம் வழங்க, சிறப்புரைகளை தி. கங்காதரன், அ. கோசலா, க. மோகனதாசன், எஸ். குலசபாநாதன் ஆகியோர் வழங்கினர், மற்றும் வாழ்த்துரையை த. கிருபாகரன் தெரிவித்தார்
.
நூலின் முதற்பிரதியை ஆசிரியர் ஆறுமுகம் குகன் வழங்க, திருமதி மூர்த்தி பாமினி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலின் சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில், நூலாசிரியரின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
பிரித்தானியாவில் வசிக்கும் உறவுகள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், நிகழ்ச்சி எமது இணையம் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதது குறிப்பிடத்தக்கது.