By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!- 50 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!- 50 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை!
இலங்கைச் செய்தி

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!- 50 ஓட்டங்களில் சுருண்டது இலங்கை!

Last updated: 2023/09/17 at 10:54 PM
Published September 17, 2023 278 Views
Share
3 Min Read
SHARE

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை 15.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மொஹமத் சிராஜ் தனது 2ஆவது ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையை மோசமான நிலைக்கு தள்ளினார்.

மொஹமத், சிராஜ், ஹார்திக் பாண்டியா, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர் இலங்கையின் 10 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டனர்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை என்பதுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இலங்கை பெற்ற இரண்டாவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னர் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2012இல் பார்ல் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியிலேயே இலங்கை மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அப் போட்டியில் ஒரு கட்டத்தல் 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இநழ்திருந்த இலங்கை, 43 ஓட்டங்களுக்கு சுருண்டிருந்தது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதுவே இலங்கை அணியின் மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாகும்.

இன்றைய இறுதிப் போட்டியில் அதிரடியாக கணிசமான ஓட்டங்களைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே மிக மோசமான அடி தெரிவினால் ஆட்டம் இழந்தார்.

ஜஸ்ப்ரிட் பும்ராவின் அகன்று செல்லும் பந்தை நோக்கி அரை மனதுடன் துடுப்பை கொண்டு சென்ற குசல் பெரேரா, விக்கெட் காப்பாளர் கே. எல். ராகுலிடம் பிடிகொடுத்து ஓட்டமின்றி வெளியேறினார்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கு அமைய அதன் பின்னர் இலங்கயின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததுடன் இலங்கையினால் மீள முடியாமல் போனது.

4ஆவது ஓவரில் மொஹமத் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவை பலமான நிலையில் இட்டார்.

அந்த ஓவரின் முதல் பந்தில் பெத்தம் நிஸ்ஸன்க (2), 3ஆம், 4ஆம் பந்துகளில் முறையே சதீர சமரவிக்ரம (0), கடைசிப் பந்தில் தனஞ்சய டி சில்வா (4) ஆகியோரை சிராஜ் ஆட்டம் இழக்கச் செய்தார்.

சிராஜ் தனது அடுத்த ஓவரில் தசுன் ஷானக்கவின் (0) விக்கெட்டை நேரடியாகப் பதம் பார்த்ததுடன் தனது முதலாவது  5 விக்கெட் குவியலைப் பதிவுசெயதார். (12 – 6 விக்)

தொடர்ச்சியாக தனது 6ஆவது ஓவரை வீசிய சிராஜ், அந்த ஓவரில் குசல் மெண்டிஸின் (17) விக்கெட்டையும் நேரடியாக சரித்தார். (33 – 7 விக்.)

இந் நிலையில் வளர்ந்துவரும் வீரர் துனித் வெல்லாலகே ஏதாவது சாதிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஹார்திக் பாண்டியாவின் பவுன்சர் பந்தை அடிக்க விளைந்து ராகுலுக்கு இலகுவான பிடி ஒன்றைக் கொடுத்து 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (40 – 8)

ஹார்திக் பாண்டியா தனது 3ஆவது ஓவரில் ப்ரமோத் மதுஷான் (1), மதீஷ பத்திரண (0) ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்தார்.

துஷான் ஹேமன்த 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அதில் ஒரு பவுண்டறி விராத் கோஹ்லியின் ஒவர் த்ரோ மூலம் கிடைத்தது.

பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் ஒரு ஒட்டமற்ற ஓவர் அடங்கலாக 7 ஓவர்களைத் தொடர்ச்சியாக வீசி 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவரது அதிசிறந்த ஒரு நாள் பந்துவீச்சுப் பெறுதியாகும்.

அவரை விட ஹார்திக் பாண்டியா 2.2 ஓவர்களில் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

51 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா துடுப்பெடுத்தாடும்.

You Might Also Like

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

Anarkali September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஆலய பாலஸ்தானத்துக்கு 2 லட்சம் ரூபா வழங்கிய யாசகர் – யாழில் சம்பவம்!
Next Article இலங்கை மைதான பணியாளர்களுக்கு 50,000 அமெரிக்க டொலர்கள்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

June 30, 2025
இலங்கைச் செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

June 30, 2025
இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?