அர்ச்சுனா எம்.பி உட்பட இருவருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்றைய தினம் (02/04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான வைத்தியர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய விசாரணையில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவரையும் கட்டாயம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

Share this Article
Leave a comment