அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு!- அரசாங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிக்கபடாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அரச மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் அது அதிகரிக்கப்பட வேண்டுமென சங்கத்தின் இணைப்பாளர்  தெரிவித்துள்ளதுடன் வற் வரி அதிகரிப்பால், பொருட்களின் விலைகள், எரிபொருள், எரிவாயு, தண்ணீர் கட்டணம் மற்றும் அனைத்து சேவைகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.

நாங்கள் கோரிய சம்பள உயர்வையோ அல்லது 20,000 கொடுப்பனவையோ வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அரசுக்கு ஜனவரி 25 வரை கால அவகாசம் தருகின்றோம்.

அதன் பின்னர், மறு அறிவித்தல் இன்றி, இந்த நிலைமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளோம் என்று சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி எச்சரித்துள்ளார்.

Share this Article