அமெரிக்காவின் பொருளாதாரத் தடை-ஈரானின் பொருளாதாரம் பாதிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
United States and Iran diplomats agreeing on a deal

அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அதன் சமீபத்திய கடற்படை முற்றுகை ஆகியவை ஈரானின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது.

இருந்த போதிலும், வொஷிங்டனுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் உறுதியை அது எந்த வகையிலும் குலைக்காது என்று தெஹ்ரானின் மத்திய கிழக்கு மூலோபாய ஆய்விற்கான மையத்தின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையால் ஈரானின் சாதாரண குடிமக்களின் பொருளாதாரத் துயரங்களும் இன்னல்களும் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த இக்கட்டான சூழ்நிலையை மக்களால் ஓரளவு தாங்கிக் கொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்திருந்தாலும், ஈரான் இதுவரை இந்த சவால்களைத் தாங்கி உயிர்வாழ முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஈரான் நாட்டு மக்களின் சகிப்புத்தன்மையையும் உறுதியையும் உடைப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்று அஸ்லானி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அமெரிக்காவிடம் சரணடைய வேண்டும் என்பதற்காக, பொதுமக்கள் மூலமாக ஈரான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது

Share this Article
Leave a comment