By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அனைத்து மனிதரும் சமன் என்ற அறம் வெல்லவும் அநீதி தோற்கவும் அடையாளத் திருநாள் தீபாவளி!- அமைச்சர் டக்ளஸ்!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > அனைத்து மனிதரும் சமன் என்ற அறம் வெல்லவும் அநீதி தோற்கவும் அடையாளத் திருநாள் தீபாவளி!- அமைச்சர் டக்ளஸ்!
இலங்கைச் செய்தி

அனைத்து மனிதரும் சமன் என்ற அறம் வெல்லவும் அநீதி தோற்கவும் அடையாளத் திருநாள் தீபாவளி!- அமைச்சர் டக்ளஸ்!

Last updated: 2023/11/12 at 12:56 PM
Published November 12, 2023 415 Views
Share
2 Min Read
SHARE

அறம் வென்று, அநீதி தோற்ற தீபாவளித் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்!
இன்பங்கள் நிலைத்து, துன்பங்கள் நீங்கி எல்லா மனிதரும் சமன் என்ற அறம் வெல்லவும் அநீதி தோற்கவும் ஓர் அடையாளத் திருநாளாகத் திகழும் தீபாவளித் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது தீபாவளி வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியவை வருமாறு:- மனித குலத்தின் மகத்தான வாழ்வின் வெற்றி என்பது புதிய உலகு நோக்கி நிமிர்ந்தெழும் காலத்தைப் படைப்பதே ஆகும். யாமார்க்கும் அடிமையல்லோம்,யமனை அஞ்சோம் என்ற எமது மக்களின் நம்பிக்கைகள் வெல்லவும் – முயல்வோம்.. வெல்வோம்.. நிமிர்வோம்.. உளம் சோரோம் என்ற எமது இலட்சியப் பயணம் எண்ணிய இலக்கை எட்டவும் நாம் இடையறாது உழைப்போம்!
பாமர மக்களின் வாழ்வுயரவும், உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்லவும், அழிவாயு தங்கள் அன்றி அறிவாயுதம் ஒன்றே. மாற்று வழியென நாம் பாதையை மாற்றினோம், பயணத்தை நிறுத்தவில்லை.

தீபாவளித் திருநாள் என்பது வெறுமனே புத்தாடை அணியவும், பொது விழாக்களை நடத்தவும், பட்டாசு கொழுத்திக் கொண்டாடி மகிழவும் உண்டாகிய நாள் மட்டுமல்ல. மாறாக, மாற்றமொன்று எங்கள் மண்ணில் மலர்ந்ததை கொண்டாடும் பெருநாளாக அது மலர வேண்டும்.

அழிவு யுத்தத்தின் அந்திகளைக் கடந்து வந்த எமது மக்கள் நிம்மதிப் பெருமூச்சை இன்று விடுகின்றனர். அந்த நிம்மதிப் பெருமூச்சு சுதந்திரக்காற்றாக எமது மண்ணில் நீடித்து வீச வேண்டும்.

மாற்றமொன்றே எமக்கு தேவை, மாற்றங்களை எமது மண்ணில் உருவாக்கி காட்டுவதற்கு மாறாக, நாளாந்தம்,வாராந்தம், மாதாந் வாழ்த்தம் எனப் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர்.

அவற்றை ஊதிப், பெரும்பித்து, மக்களை உசுப்பெற்றி, கூச்சலிட்டும் வருகின்றனர். அதன் மூலம் அடுத்த தேர்தல் போட்டிக்கான அத்திவாரங்களே இங்கு நடந்தேறி வருகின்றன.

தேர்தலுக்காக அன்றி எம் தமிழ் தேசத்திற்காக தியாகங்களை ஏற்று நடக்கும் எமது யதார்த்த வழிமுறை மீது யாகும் சேற்றை வாரித்தூற்றுவோர் முடிந்தளவு தூற்றட்டும்.

நாம் நேசிக்கும் மக்களுக்கான நிரந்தர விடியலை எட்டும் எமது இலட்சிய பயணத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவதுறு பொழிவோரை எதிர்கொண்டு நாம் பயணிப்பதே எம் தமிழ் தேசம் தலை நிமிரவும், அரசியல், இன்று நாம் ஆற்றும் தியாகங்கள்.
பொருளாதார, சமூக சமத்துவ நீதி ஓங்கவும், கூச்சல்களாலும், கொக்கரிப்புகளாலும் எந்தக் கோட்டையின் கதவுகளும் திறக்காது. அழகார்ந்த உரிமை வாழ்வை சகல மக்களும் அனுபவித்து நிமிர வேண்டும். இல்லங்கள் தோறும் துயரங்கள் அற்ற மகிழ் வாழ்வு மலர வேண்டும்.
தீபாவளித் திருநாளின் அர்த்தங்களை் தேச மெங்கும் தீப ஒளியாகத் துலங்க வேனண்டும். அறம் வெல்லும்,அநீதி தோற்கும்!!
– இவ்வாறு தனது தீடாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

Anarkali November 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அரசு விதிக்கவுள்ள புதிய வரி!- மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலைகள்!
Next Article சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்றவர் கைது!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?