சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்றவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற ஒருவர் தமிழக கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் ஏதிலியாக தமிழகத்துக்கு செல்ல முயற்சித்த போது நேற்று கைதானார்.

கைதானவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர் என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பகுதிகளில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சந்தேகநபர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share this Article