வவுனியாவில் சமூகத்தில் இருந்து 3 பேருக்கு கொரோனா தொற்று

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரவலாக எழுமாறான பிசீஆர் பரிசோதனைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

இதன் முடிவுகள் சில இன்று மதியம் (11.05) வெளியாகின. அதில் வவுனியா ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் ஒருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், கல்மடு பகுதியில் ஒருவருக்கும் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பேரும் புதிதாக சமூக மட்டத்தில் இருந்து இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share this Article