வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தினால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மரக்கன்றுகள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை சூழலை பசுமைபடுத்தும் நோக்கில் நெடுந்தீவு வைத்தியசாலை நிருவாகத்தினரின் வேண்டு கோளிற்கமைய  “வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தினால்” பயன்தரு மரக்கன்றுகள் கடந்த புதன்கிழமை  (செப். 11) வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது பயன்தரு மரங்கள், பூக்கன்றுகள், சிறுமரங்கள் மற்றும் பூச்சாடிகள்என்பவற்றை அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்பளிப்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட மரக்கன்றுகள் அன்றையதினமே  ஒன்றியத்தினருடன் இணைந்து வைபவ ரீதியாக வைத்தியசாலை வளாகத்தில் நாட்டப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article