வடதாரகைக்கான மின்விசிறிகள் அனபளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வடதாரகை படகுக்கான மின் விசிறிகள் 05 அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இராமலிங்கம் சுந்தரலிங்கம் ( லயன் சுந்தா) அவர்கள் வடதாரகை பயணிகளின் நன்மைகருதி படகில் பொருத்துவதற்காக 05 மின்விசிறிகளை கடந்த மே 22 அன்று யாழ்நகரில் வைத்து வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரியிடம் கையளித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (மே 27) அன்று இவற்றினை படகில் பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அதிகார சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு கடற் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வடதாரகை படகுக்கானமின் விசிறிகள் நீண்ட நாட்களாக செயலிழந்து இருந்தமையால் பயணிகள்பெரும்   சுவாச நெருக்கடிகளை எதிர்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Screenshot
Share this Article