திகதி: 29.11.2025 நேரம்: மாலை 05.00 மணி நிலவரம்
- எந்திரி த.ராஜகோபு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர், வடக்கு மாகாணம்.
வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட குளங்களின் தற்போதைய நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
💧 இரணைமடு குளத்தின் தற்போதைய நிலை:
நீர் மட்டம்: இன்று பகல் 40′ 3″ அடியாக இருந்த நீர்மட்டம், தற்போது 39′ 11″ அடியாகக் குறைவடைந்துள்ளது.
வான் கதவுகள்: 14 ஆரைக்கதவுகளும் அதியுயர் மட்டத்திற்கு உயர்த்தப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கை: குளத்தின் பாதுகாப்பிற்காக வால்கட்டுப்பகுதி வெட்டப்பட்டுள்ள போதிலும், அதனூடாக இதுவரை நீர் வெளியேற்றப்படவில்லை. நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மட்டுமே இது அனுமதிக்கப்படும்.
📊 மொத்த குளங்களின் நிலவரம்:
வடக்கு மாகாணத்திலுள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர குளங்களில் 51 குளங்கள் வான் பாயும் நிலையில் உள்ளன.
ஒரு குளம் 75% – 100% நீர் கொள்ளளவை எட்டியுள்ளது.
⚠️ பாதிப்புகள் மற்றும் உடைப்புக்கள்:
முற்றாக உடைப்பெடுத்தவை: மன்னார் மாவட்டத்தின் வெளிமருதமடு மற்றும் கூராய்க்குளம் (தொடர்பாடல் சிக்கல் காரணமாக மேலதிக விபரம் பெறப்படவில்லை).
வான் பாதை தடுப்பணை உடைந்தவை:
வவுனியா: பம்பைமடு, வவுனியா குளம், மகாகச்சகொடிய குளம்.
முல்லைத்தீவு: முத்துஐயன்கட்டு.
கிளிநொச்சி: இரணைமடு.
🚧 பாதுகாப்பு கருதி வால்கட்டு வெட்டப்பட்ட குளங்கள்: குளங்களின் உடைப்பைத் தடுக்கும் முன்னெச்சரிக்கையாக பின்வரும் குளங்களின் வால்கட்டுப் பகுதிகள் வெட்டப்பட்டு நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருகிறது:
வவுனியா: கல்மடு, பெரியதம்பனை, அலியாமருதமடு, கனகராயன்குளம்.
மன்னார்: பெரியமடு.
கிளிநொச்சி: புழுதியாறு.
முல்லைத்தீவு: வவுனிக்குளம், உடையார்கட்டு, தட்டயர்மலை.
🌊 உவர்நீர்த்தடுப்பணைகள்: யாழ். மாவட்டத்தின் தொண்டைமானாறு, அரியாலை, அராலி ஆகிய பகுதிகளில் கடல் மட்டம் 3′ 6″ வரை உயர்ந்துள்ளதால், தடுப்பணை கதவுகளைத் திறந்து நீரை வெளியேற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
📡 தொடர்பாடல் சிக்கல்: மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிப்பு காரணமாக களத்திலுள்ள உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொள்வதில் சிரமம் நிலவிய போதிலும், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்