ரூ.2,000 பில்லியன் முதலீட்டு ஒதுக்கீட்டுடன் 2027 வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (11/11) ஜனாதிபதி செயலகத்தில் பரிசீலித்தார்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவும் இதன்போது இணைந்துகொண்டார்.

தித்வா அனர்த்தம் மற்றும் மேற்காசிய நெருக்கடி போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களுக்கு மத்தியில் கூட, முறையான முகாமைத்துவம் மற்றும் உயர்ந்த நிதி ஒழுக்கத்துடன் செயற்பட்டமையினால் இந்நாட்டின் பல பிரதான பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தற்போதைய அரசாங்கம் அடைந்துள்ளது.

அதன்படி, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலக்கைத் தாண்டி, பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றமிக்க அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட 2,000 பில்லியன் ரூபா முதலீட்டு ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (12/11) வியாழக்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

Share this Article
Leave a comment