By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!- இந்த மாதம் 300 பேர் சிகிச்சையில்!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!- இந்த மாதம் 300 பேர் சிகிச்சையில்!
யாழ்ப்பாணம்

யாழில் டெங்குத் தொற்று அதிகரிப்பு!- இந்த மாதம் 300 பேர் சிகிச்சையில்!

Last updated: 2023/01/29 at 12:38 PM
Published January 29, 2023 400 Views
Share
2 Min Read
SHARE

இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு இலங்கையில் ஆண்டு முழுவதும் கண்டறியப்பட்ட டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு சமனாகும் என்று யாழ் போதனா வைத்திய சாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்

வடக்கில் டெங்குத் தொற்றின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் 2023 ஆம் ஆண்டு தை மாதம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 ஆக காணப்படுகின்றது. இதில் 33 சத வீதமானவர்கள் சிறுவர்களாக காணப்படுகின்றார்கள்.

2022 ஆம் ஆண்டு தை மாதம் 200 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். கடந்த வருடம் தை மாதத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் 50 வீதம் அதிகமாக காணப்படுகின்றது.

எனவே டெங்குத் தொற்று தொடர்பான விழிப்புணர்வை செய்யாவிட்டால் இந்த வருடம் சுமார் 2000 டெங்குத் தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்ககூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

எனவே டெங்குத் தொற்று தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியம். டெங்குத் தொற்று அதிகம் பாதிப்பது சிறுவர்களையே எனவே சிறுவர்களுடைய பெற்றோர்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும்

டெங்குத் தொற்றானது சிறுவர்களை குறிப்பாக 15 வயதுக்குட்பட்டவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றது. அடுத்ததாக வயது முதிர்ந்தவர்களை பாதிக்கின்றது. அடுத்ததாக உடற்பருமன் உடையவர்கள் சலரோக நோயுடையவர்கள் அஸ்மா நோயுடையவர்களை பாதிக்கின்றது

எனவே டெங்குத் தொற்று தொடர்பான விழிப்புணர்வு மிக முக்கியமாகும் அடுத்ததாக டெங்கு நுளம்பு மூலம் தொற்றுகின்றது.

வீதிகளில் கழிவுகள் காணப்படுதல் மிக முக்கியமான பிரச்சினை 90 வீதமான மக்கள் வீதிகளில் கழிவுகளை வீசும் போது அதில் நுளம்பு பெருகுவதனால் டெங்கு நுளம்புஅதிகம் பரவுகின்றது.

குறிப்பாக சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். கடந்த வருடம் சுமார் ஐந்து பேர் டெங்குத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

எனவே இவ்வருடம் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படாது இருப்பதற்கு நமக்கு முதல் தேவை டெங்கு பெருகும் இடங்களை அகற்றுதல் வேண்டும் அதாவது சுத்தப்படுத்தல் வேண்டும்.

அண்மை காலங்களில் டெங்குத் தொற்று பெருகுமிடங்கள் சுற்றுச்சூழல் சுகாதாரம் மிக முக்கியமாகும் அவற்றினை டெங்கு விழிப்புணர்வு வாரம் மூலம் பொதுச் சுகாதார பரிசோதரர்கள் மூலம் செய்கின்றோம்.

புதிது புதிதாக கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. அவை அரைகுறையாக இருக்கும்போது அதில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான சாத்திய கூறுகள் உண்டு.

யாழ் நகருக்கு அப்பால் புதிய நகரங்கள் போல கடைகள் கட்டப்படுகின்றன. தோட்ட காணிகளில் வீடுகள் மண்டபங்கள் கடைகள் கட்டும்போது அங்கு நுளம்பு பரவுவதற்குரிய சூழல் அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே டெங்குத் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள சுற்றுச்சூழலை சுத்தமாக பேணுவதனால் டெங்கு நுளம்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.

You Might Also Like

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

Anarkali January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முல்லைத்தீவு இருட்டுமடு தமிழ் வித்தியாலய மாணவர்கள் சாதனை!
Next Article முட்டை பிரச்சினை தீராவிட்டால் சுதந்திர தினத்தில் சேவல் கூவும்! – அரசுக்கு எச்சரிக்கை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?