வடக்கு கடலில் மீண்டும் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!- மீனவர்கள் குற்றச்சாட்டு!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் இன்று (பெப்ரவரி 6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நெடுந்தீவு தொடக்கம் நையினா தீவு, எழுவைதீவு, அனலைதீவு, மாதகல், பருத்தித்துறை மற்றும் வடமராட்சி வரை இந்திய மீனவருடைய ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

இழுவைப் படகு ஊடாக எமது தொழிலாளர்களுடைய சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 100 தொடக்கம் 150 வரையிலான படகுகள் கரைக்கு வந்து தொழிலாளர்களுடைய சொத்துக்களை நாசம் செய்துள்ளன.

கோவளம் கடற்கரைப் பகுதியில் மீனவர்களுடைய வலைகள் அறுக்கப்பட்டு சொத்துக்கள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share this Article