முல்லைத்தீவு மாவட்ட வீடமைப்புக் குழுக் கூட்டம் நேற்று (மார்ச் 29) முல்லைத்தீவு மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலர் திரு.க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பயனாளர்களுக்கு கையளிக்கப்படவுள்ள சில வீட்டுத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இந்த ஆண்டு பயனாளர்களுக்கு கையளிக்கப்படவுள்ள பிலக்குடியிருப்பு இந்தியன் மாதிரிக் கிராமம் தொடர்பாகவும், 2020, 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ”கிராமத்திற்கொரு வீடு” வீட்டுத்திட்ட முன்னேற்ற விகிதம் தொடர்பிலும், 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ” வெள்ள நிவாரண” வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் மற்றும் வீடமைப்பு கடனறவீடு, 2023 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு கடன் திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பனிக்கன்குளம் ”அரச உத்தியோகத்தர் ” வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் மேலதி மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்(நிர்வாகம் ),மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ம.கி.வில்வராஜா, உலக உணவுத் திட்டத்தின் மாவட்ட அலுவலகர் திருமதி ஜெயபவாணி, மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.