வட்டுதெற்கில் பொருண்மியம் நலிந்த மாணவர்களுக்கு சைக்கிள்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டுதெற்கு பிரிவைச் சேர்ந்த 14 பொருண்மியம் நலிந்த மாணவர்களுக்கு  துவிச்சக்கரவண்டிகள் சங்கானைப் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

வட்டு தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கமைய world vision நிறுவனத்தால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article