முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேஷ உரையை நிகழ்த்தவுள்ளார்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வருகிற வியாழக்கிழமை (ஒக். 17) சிறப்பு உரையொன்றை ஆற்றவுள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், ரணில் விக்கிரமசிங்க முதல் முறையாக பொதுவில் உரையாற்ற உள்ளார்.

இந்த உரையின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கருத்துகளை வெளிப்படுத்துவார் எனத் தெரிகிறது.

பொதுத் தேர்தலில் போட்டியிடாமலும், தேசிய பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வராமலும் தீர்மானித்த ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Share this Article