யாழ்.மாநகரில் முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வர்த்தக நிலையங்களை நடத்தும், மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் நபர்களுக்கு இன்று திங்கள் கிழமை பீ.சி.ஆர் பரிசோதனை காலை 7.30 மணி முதல் நவீன சந்தை கட்டிட தொகுதியில் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த முறை நெருக்கடி காரணமாக மாநகரசபை எல்லைக்கு வெளியில் வதிவிடத்தைக் கொண்டவர்கள் அந்தந்தப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
கடந்த 28,29 ஆம் திகதிகளில் பிசிஆர் பரிசோதனை செய்தவர்களுக்கும், இதுவரை பிசிஆர் பரிசோதனை செய்யாதவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும்.
28,29 ஆம் திகதிகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை நடைபெறும் செய்ய வேண்டாம் அவர்களுக்குப் பிறிதொருதினத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.