மன்னார் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! கட்டுக்கரை குளத்தின் வான் பகுதியில் ஆபத்து!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள மிக முக்கியமான மற்றும் அவசர எச்சரிக்கை

மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர்மட்டம் அபாயகரமான அளவில் உயர்ந்துள்ளதால், அதன் வான் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், குளத்தின் வான் பகுதி பாதிப்படையும் ஆபத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுக்கரை குளத்தின் வான் பகுதியால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ள பின்வரும் தாழ்வு பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அவதானத்துடன் இருக்க வேண்டும்:

@ பரப்புக்கடந்தான்

@ அடம்பன் தாழ்வு பகுதிகள்

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலைமையைத் தொடர்ந்து அவதானமாக கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்தவிதத் தயக்கமும் இன்றி உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இந்த அனர்த்த நிலைமை தொடர்பான தகவல் நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதி செய்துள்ளது.

உயிர் பாதுகாப்பு மிக அவசியம் எனவே அனைவரும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குச் செவிமடுத்து, பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share this Article
Leave a comment