மன்னார் நீதிமன்றம் முன்றலில் துப்பாக்கி சூடு, இருவர் பலி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் நீதிமன்றம் முன்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் இன்று(ஜனவரி 16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில்இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்துஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர்படுகொலை செய்திருந்தனர்.  

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில்நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் (ஜனவரி16) வியாழக்கிழமை வருகை தந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில்வந்த இருவர் சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிசென்றுள்ளனர். 

குறித்த சம்பவத்தால் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார்குவிக்கப்பட்டுள்ள நிலையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Article