மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் 2027 பாதீடு ஏகமனதாக வெற்றி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபையின் பாதீடானது இன்று (17.11) சபையின் 18ஆவது அமர்விலே  தவிசாளர் அ.அன்று ராஜன்  அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு சபையின் ஏகமனதான தீர்மானத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.   

குறித்த பாதீடானது மொத்தப் பற்றுகளாக 161,765,208.10 ரூபாவாகவும், மொத்த செலவினமானது 161,763,800.00 ரூபாவாகவும் காணப்படுகிறது.

குறித்த பாதீட்டில் செலவீனத்தை மிஞ்சிய வருமானமாக 1408.10 ரூபா உள்ளது

இந்த சொந்த வருமானத்திலே சபைக்கு 40 வீதமான தொகை மூலதனச் செலவினத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளனுடன், இந்த மூலதனச் செலவினத்திலே 17 மில்லியன் கிராமிய வீதிகளை அமைப்பதற்காகவும், ஏனைய வருமானங்கள் சபையின் சொந்த வருமானத்தை அதிகரிக்கக் கூடிய வகையிலே கடைத் தொகுதிகளாகவும், சந்தைக் கட்டிடங்களாகவும், ஏனைய வருமானம் விளைக்கக்கூடிய வாகனங்களை திருத்தம் செய்வதற்காகவும், சுத்திகரிப்பு நிலையம், திண்மக் கழிவு முகாமத்துவ நிலையம் போன்றவற்றுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.   

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இம்முறையானது சொந்த வருமானம் அதிகரிக்கப்பட்டு பாதீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Article
Leave a comment