மன்னாரில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலயவளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர்ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (செப். 26) காலை சடலமாகமீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் உயிலங்குளம் முதலை குத்தி பகுதியை சேர்ந்த இளம்குடும்பஸ்தரான அந்தோனி தெய்வீகன் (வயது 45) என அடையாளம்காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற இலுப்பைக் கடவை பொலிஸார்சடலத்தை பார்வையிட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரிபா.பிரபாநந்தன் சடலத்தை பார்வையிட்டதோடு, சடலத்தை மீட்டு மன்னார்மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில்ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்

Share this Article