மடுவில் இருந்து மன்னார் நோக்கி காலை 6.40 க்கு பயணிக்கும் இலங்கைபோக்குவரத்து பேருந்து அதிகளவு பயணிகளை ஏற்றி உயிர் பலி கொடுக்கநினைக்கும் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மீது மக்கள் விசனம்.
இப் பேருந்தில் பாலம்பிட்டி, தட்சாணமருதமடு , மடு பெரியபண்டிவிரிச்சான் , சின்ன பண்டிவிரிச்சான் , சோதி நகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பாடசாலைமாணவர்கள் மற்றும் நோயாளிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என பெருமளவு பயணிகள் இந்த பேருந்தில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
காலையில் பேரூந்து நிறைய பயணிகளை அதிகமாக ஏற்றி பேருந்துமிதிபலகையிலே சுமராக 15 மேற்பட்ட நபர்கள் பயணிக்கிறார்கள். இதனால்பயணிகள் யாருக்காவது திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை சீர்செய்து இன்னொரு பேருந்தையும் காலை நேர சேவையில் மடு எற்படுத்திதருமாறு மடு பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.