நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஊடாக பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு பாடசாலைகளை சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்யும் நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக இடம் பெற்று வருகின்றது
ஊரும் உறவும் அறிமுக நிகழ்வினைத் தொடர்ந்து கிணறுகள் கேணிகள் தூர்;வாரும் துப்பரவு செய்யும் பணிகள் பாடசாலைள் சேமக்காலைகள் யாவும் சிரமதான அடிப்படையில் மக்களின் பங்களிப்புடன் சிறந்த முறையில் பிரதேச செயலாளரின் ஒருங்கிணைப்பில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
பாடசாலைகள் வரிசையில் நெடுந்தீவில் உள்ள எட்டு பாடசாலைகளும் துப்பரவு செய்யப்பட்டுள்ளன அந்த வகையில் இன்று காலை முதல் மாலை வரை நெடுந்தீவு மகாவித்தியாலயத்தன் உட்பகுதிகள், வெளிப்பகுதிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என்பன துப்பரவு செய்யப்பட்டதுடன் கல் வேலிகளும் சீரான முறையில் அமைக்கப்பட்டது
இச் சிரமதான செயற்பாட்டில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள், இயைஞர் யுவதிகள் என அனைவரும் இணைந்து செயற்பட்டமையினை அவதானிக்க முடிந்தது.