பாதை சேவை போக்குவரத்து நிறுத்தம்: மக்கள் பெரும் அவதி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையிலான பாதை சேவை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த பாதை சேவை கடந்த செவ்வாய்க் கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் காரைநகர் குறிகட்டுவான் துறைமுகத்திற்கான பாலம் அமைக்கும் முயற்சி கௌரவ அமைச்சர் திரு.கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

Share this Article