மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு, மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும், அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (55-65) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அத்துடன் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
பொது மக்கள் மற்றும் மீனவ சமூகம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மீனவர்கள் தங்களது உடமைகளை மிகவும் பாதுகாப்பாக வைப்பதுடன் காற்றினால் ஏற்படக் கூடிய அழிவுகளில் இருந்து பாதுகாத்து கொள்வதற்குரிய முற்பாதுகாப்புடன் இருப்பது மிக அவசியமாகும்.
வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு மிக அருகில் பாதுகாப்பற்று இருக்கும் மரங்கள் குறித்து மிகுந்த அவதானம் செலுத்துவதுடன் மின்சார மற்றும் தொலைத் தொடர்பு வயர்களுக்கு மிக அருகில் எவ்வித பாதுகாப்பற்று இருக்கும் மரங்கள் குறித்தும் மிகுந்த அவதானத்துடன் செயலாற்ற வேண்டும்.
வீதிகளில் பயனம் செய்வோர் அதி வேகமாக வாகனத்தினை செலுத்தாமல் காற்றின் வேகத்திற்கு ஏற்ப சாதாரண வேகத்தில் பயணிப்பது மிக அவசியமாகும். குறிப்பாக துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயலாற்ற வேண்டும்.
பிரயாணத்தின் போது தங்களது சிறு பிள்ளைகளை கூட்டிச் செல்வோர் முக்தினை முழுமையாக மறைக்க கூடிய தலைக் கவசங்களை அணிவது மிக பொருத்தமாகும்.
தூசி மற்றும் மண் என்பது கண்களில் சென்று பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்பதால் சரியான முற்பாதுகாப்புடன் வீதிகளில் பயணிப்பது மிகவும் அவசியமாகும்.
காற்று காரணமாக மின்சார வயர்கள் அறுந்து விழுந்தால் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கத்துடன் (021) 202 4444 தொடர்பு கொள்ளவும்.
அல்லது
சாவகச்சேரி 0212270040
சுன்னாகம் 0212240301
யாழ்ப்பாணம் 0212222609
யாழ்ப்பாணம் 0212222498
பருத்தித்துறை 0212263257
வட்டுக்கோட்டை 0212250855
வேலனை 0212211525
மேல் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும். மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரும் செல்வதை தவிர்ப்பது மிக நல்லது.