புதுக்குடியிருப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று(செப்ரெம்பர் 16) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டு மீட்க்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த 29 அகவை உடைய இளைஞன் ஒருவர் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென கடந்த 15 ஆம் திகதி உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 அகவை உடைய குறித்த இளைஞனே காணாமல் போய் உள்ளதாகநேற்று உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சடலத்தை மீட்க நடவடிக்கை மற்றும் மேலதிக விசாரணை என்பவற்றை புதுகுடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Share this Article