வேலணை புங்குடுதீவு இணைப்புபாலம் நீண்ட காலமாக திருத்தம் செய்யாமல் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே காணப்பட்டது. புங்குடுதீவு மக்கள் மட்டுமன்றி நெடுந்தீவு நயினாதீவு செல்கின்ற அனைவரும் இப்பாலத்தினையே பயன்படுத்தி வருகின்றார்கள் ஏற்கனவே இப்பாலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இதில் போக்குவரத்து செய்வது மிகவும் கடினமாகவே காணப்பட்டது.
ஆயினும் அண்மையில் ஏற்பட்ட புரவித்தாக்க்தினால் கடல் மேலேழுந்து வீதிக்கு மேலாக கடல் நீர் பாய்ந்தோடியதுடன் இரண்டு கரைகளிலும் இப்பாலம் பாரியபாதிப்புக்குள்ளாகியுள்ளது.
பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு பாரிய கிடங்குகளாக காணப்படுகின்றன இதனால் தற்போது போக்குவரத்து செய்வது மிகவும் கடினமாக காணப்படுவதுடன் பாதுகாப்பற்ற தன்மையும் காணபடுகின்றது.
இப்பாலங்கள் பல இடங்களில் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றபோதும் சில இடங்களிலேயே பாதுகாப்பு குறியீடுகள் காணப்படுகின்றன ஏனைய இடங்கள் இன்னும் அடையாள்படுத்தப்படவில்லை. அவற்றினை அடையாளப்படுத்தி விபத்துக்கள் ஏற்படுத்துவதனை தவிர்க்க வேண்டிய தேவைப்பாடும் காணப்படுகின்றது.
குறிப்பிட்ட அரச திணைக்களங்கள் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பாக அக்கறை கொண்டு மிக விரைவாக இப்பாலத்தினை திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளடல் வேண்டும்.