பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தில்வாக்களிக்கும் வாக்காளருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் அவரதுகோரிக்கைக்கு இணங்க வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 127ஆஆம் பிரிவின் கீழ் தமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்கெடுப்பு நிலையத்தில்தனது வாக்கையளிக்க முடியாதிருக்கும் என்று நியாயமாகப் பயப்படுகின்றவாக்காளர்கள், வேறொரு வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்குஅனுமதியளிக்கும்படி வேண்டுகோள் ஒன்றை விடுக்க முடியும் என்றும், அதற்கிணங்க அத்தேருநர்கள் வாக்குகளையளிப்பதற்காகசெயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடியுமென்றும் தேர்தல்கள்ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்த வாக்காளர்கள், அவர்களது விண்ணப்பப் பத்திரங்களை பெயர் குறித்தநியமன அறிவித்தல் திகதியிலிருந்து 07 நாட்களுக்குள், அதாவது 2024.10.01 ஆந் திகதிக்கு முன்னர், இராஜகிரிய சரண மாவத்தையிலிருக்கும் தேர்தல்கள்செயலகத்திற்கோ, தாம் வதியும் மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள்அலுவலகத்திற்கோ சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர் 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பை அடிப்படையாககொண்டு விண்ணப்பப் பத்திரங்களைப் பூரத்தி செய்தல் வேண்டும். இவ்விடாப்புக்கள் அனைத்தும் மாவட்ட செயலகங்களிலும்/ கச்சேரிகளிலும்மற்றும் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களிலும் வைக்கப்படும்.

அத்தோடு 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பின் பதிவு செய்யப்பட்டுள்ளவிபரங்களை www.elections.gov.lk இணையத்தளத்தினூடாக பரீட்சிக்கமுடியும்.

விண்ணப்பப் பத்திரத்தில் காணப்படும் தகவல்கள் சரியானவையெனவிண்ணப்பதாரர் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரினால்உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரங்களை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களில், இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன் www.elections.gov.lk இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யமுடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழுஅறிவித்துள்ளது.

Share this Article