By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவு யுவதியின் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவு யுவதியின் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
நெடுந்தீவுயாழ்ப்பாணம்

நெடுந்தீவு யுவதியின் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Last updated: 2020/08/23 at 12:58 AM
Published August 23, 2020 538 Views
Share
2 Min Read
SHARE

மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள உப்பள உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த ஆகஸ்ட்  13ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை தொடர்பில் குறித்த யுவதியின் சகோதரி உட்பட இரு பெண்கள் மன்னார் பொலிஸரின் உதவியுடன் கைது செய்யபட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் நெடுந்தீவை சேர்ந்த டொறிக்காஜூயின் (வயது 21) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் கண்டறியப்பட்ட நிலையிலேயே சந்தேக நபர்களான இந்த இரண்டு பெண்களும் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் படி யுவதியின் கழுத்து நெரிக்கப்பட்டு, அவரது கால்கள், கைகள் பிடித்து வைத்திருக்கப்பட்ட நிலையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்த போது மன்னாரில் உள்ள உணவகம் ஒன்றில் கொல்லப்பட்ட யுவதி, இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் சென்று உணவு உட்கொண்ட காட்சி பதிவாகியிருந்தது. அந்தக் காட்சியைப் பெற்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆரம்பத்தில் அந்தப் பெண்கள் நாவற்குழி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர்கள் இல்லை. தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளில் கொல்லப்பட்ட பெண் நெடுந்தீவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொல்லப்பட்ட இளம் யுவதியின் சகோதரி (வயது-30), அவரது பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவருமே நெடுந்தீவில் வைத்து நேற்று (ஆகஸ்ட் 21) கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், தலைமறைவாகியுள்ள 50 வயதுடைய பிரதான சந்தேக நபரான கொல்லப்பட்ட பெண்ணின் மாமனார் தேடப்பட்டு வருகிறார்.

கொலை பின்னணி

“சகோதரியின் கணவருக்கும் கொல்லப்பட்ட இளம் பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அவரது சகோதரி சந்தேகம் கொண்டுள்ளார். இந்தச் சந்தேகத்தால் சகோதரிகள் இடையே முரண்பாடு நீடித்துள்ளது.

இளம் பெண்ணின் தந்தை காலமாகிய நிலையில் தாயார் வெளிநாட்டில் உள்ளார். அவரது தாயின் சகோதரன் செட்டிக்குளத்தில் உள்ளார். அவர் வெளிநாட்டு முகவர் நிலையத்துடன் தொடர்புடையவர். அதனால் கொல்லப்பட்ட இளம் பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்.

அதனால் கொழும்பில் சில ஆவணங்கள் கையளிக்கவேண்டும் என்று தெரிவித்து சகோதரிகள் இருவரையும் அவர்களது பெரியதாயின் மகனின் மனைவியையும் அழைத்துக் கொண்டு மன்னார் பயணித்துள்ளார். அங்கு நகரில் நடமாடிவிட்டு உப்பளத்தில் எவரும் இல்லை என அறிந்து இளம் பெண்ணை மூவரும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மாமன் கழுத்தை நெரிக்க மற்றைய இரு பெண்களும் கால்களையும் கைகளையும் பிடித்துவைத்திருந்துள்ளனர். உயிர் பிரிந்ததும் அங்கிருந்து தப்பித்துள்ளனர்” – என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

SUB EDITOR August 23, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் நெடுந்தீவை சேர்ந்தவர்
Next Article 1994 முதல் தொடர் வெற்றி கண்டு வரும் டக்ளஸ் தேவானந்தா
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?