நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு நிறைவு தின விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பம் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 80வது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் அடுத்த வருடம் (2027) ஜனவரி மாதம் 16 மற்றும் 17 திகதிகளில் பாடசாலை சமூகத்துடன் இணைந்து பழைய மாணவர் சங்கத்தினரால் சிறப்பாக மேற்கொள்ள ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது

இதன் ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களுக்கான வீதியோட்ட நிகழ்வு இம் மாதம் 28ம் திகதி (28.10.2026) புதன் கிழமை காலை 06.00 மணிக்கு பாடசாலை முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.

வீதியோட்ட நிகழ்வானது நெடுந்தீவு பல.நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவர் அமரர் சு.கோபலசிங்கம் அவர்களது நினைவாக ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக இடம் பெறும்

நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இப் போட்டியில் பங்கு கொள்ள முடியும் என்பதுடன் பாடசாலையின் பழைய மாணவர்களின் பிள்ளைகள் நெடுந்தீவிற்கு வெளியில் பாடசாலைகளில் கல்வி கற்கின்றவர்களும் இப் போட்டியில் பங்கு கொள்ள முடியும்.

Share this Article
Leave a comment