நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள தொடர் மருத்துவ சிகிச்சை பெறுவோருக்கான கிளினிக் கொப்பிகள் மற்றும் கிளினிக் பதிவு அட்டைகள் தேவை தொடர்பில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஐந்நூறு கொப்பிகளும் , ஆயிரம் கிளினிக் அட்டைகளும் நேற்றையதினம் (ஜூலை18) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு வைத்தியசாலையின் பெயர் பொறிக்கப்பட்ட கிளினிக் கொப்பிகள், கிளினிக் அட்டைகளை என்பன நெடுந்தீவைச் சேர்ந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் அமரர் மகேசு பார்த்தீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது தந்தையார் செ. மகேசு அவர்களால் நெடுந்தீவு பிரதேச வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.