நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரின் இறுதி நிகழ்வு நாளை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர்  நல்லதம்பி சசிகுமார் அவர்கள் கடந்த ஜூலை 15 திங்கட்கிழமை காலை வவுனியாவில் காலமாகியிருந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி, தையலம்மா இணையரின் அன்பு மகனும் பத்மநாதன், சோதிமலர் இணையரின் மருமகனும் ரஜகுமாரி அவர்களின் பாசமிகு கணவருமாவார்.

இறுதிக்கிரயைகள் நாளை (ஜூலை18)  காலை 8.00 மணியளவில் வவுனியாவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக வவுனியா இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

Share this Article